tamil cinema:சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருமே தாங்கள் விவாகரத்து பெற்று பிரியபோவதாக அறிவித்தனர்.
மேலும் நாக சைதன்யாவின் தந்தையான முன்னணி நடிகர் நாகார்ஜுனா, எங்கள் குடும்பத்தை விட்டுச் சென்றாலும் என்றுமே சமந்தா எனது மகள்தான் எனக்கூறி நெகிழ வைத்தார். இந்த நிலையில் தற்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணையப் போவதாக பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.

tamil cinema
அதாவது அண்மையில் நாக சைதன்யா பேட்டி ஒன்றில் விவாகரத்து குறித்து கேட்டதற்கு சமந்தாவிற்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சி என கூறியிருந்தார். மேலும் எனக்கு ஏற்ற ஜோடி சமந்தாதான் எனவும் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி சமந்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விவாகரத்து தொடர்பான பதிவை தற்போது டெலிட் செய்துள்ளாராம். அதனால் இவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.