31 March, 2023

ப்பா… இந்த வயசிலும் இப்படியொரு எனர்ஜியா?… இந்தியா டீம்லயே சேர்த்துடலாம் போல‌

tamil cinema : காட்மேன் சிக்னா என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், 80 வயது முதியவர் ஒருவர் கையில் பேட் உடன் களம் இறங்குகிறார். அசால்ட்டாக பேட்டை சுழற்றி பந்தை ஓங்கி அடித்துவிட்டு, சற்றும் தளர்வில்லாமல் இரண்டு ரன்கள் ஓடுகிறார். அதன் பின்னர் தனது பேட்டை தரையில் போட்டுவிட்டு,

ரன் ஓடிய மகிழ்ச்சியில் பொக்கை வாய் முழுவதும் சிரிப்பாக நடனமாடுகிறார். 14 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவை பார்க்கும் போது, நமக்கும் அந்த முதியவரின் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும், தாத்தாவின் எனர்ஜி லெவலுக்கு ஈடு இணை இல்லை என புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.  விளையாட்டுக்கு வயது ஒரு தடையல்ல, அது தரும் மகிழ்ச்சி அளவிட முடியாதது என்பதை வீடியோவில் தோன்றும் முதியவர் நிரூபித்து காட்டியிருக்கிறார்.

Share