24 September, 2023

காதலனைக் கொன்றதிற்காக பலி வாங்க துடிக்கும் பெண் அரவம்…!

tamil cinema : உ.பி மாநிலம ராம்பூர் மாவட்டம் தானாஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்ஸான் அலி, இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டின் அருகே ஒரு இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது அங்கு இரண்டு பாம்புகள் பிண்ணி பினைந்து கொண்டிருந்தது.

இதை பார்த்ததும் எஸ்ஸான் அலி அந்த பாம்பின் மீது கல்லை எறிந்து கொல்ல முயற்சி செய்துள்ளார். அதில் ஒரு பாம்பு இறந்துவிட்டது. மற்றொரு பாம்பு தப்பி சென்றுவிட்டது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் எப்படியோ வந்த பாம்பு இவரை தீண்டியுள்ளது. இதை பார்த்து அவர் கத்தியதும் உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்தார். சில நாட்கள் கழித்து மீண்டும் பாம்பு கடித்துள்ளது. இதிலும் அவர் மீண்டுள்ளார். இப்படியாக இதுவரை அவரை ஒரே பாம்பு 7 முறை கடித்துள்ளது. 7 முறையும் தப்பி பிழைத்துள்ளார். 7வது முறை அவர் பணியாற்றும் போது அவரது கையில் கடித்துள்ளது.

அப்பொழுதும் அக்கம் பக்கத்தினர் தான் இவரை காப்பாற்றியுள்ளனர். 7 முறை பாம்பு கடித்தால் தான் ஏற்கனவே பாம்பு ஒன்றாக இருக்கும் போது அதில் ஒன்றை மட்டும் கொன்றது தான் இதற்கு காரணம் என அவர் கருதுகிறார்.

தான் கொல்லும் போது தப்பி சென்ற பாம்பு தான் தற்போது மீண்டும் வந்து தன்னை தாக்கியுள்ளது. என கருதுகிறார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.