31 May, 2023

சாப்பிட்ட எலும்பு துண்டுகளையே போட்டு மீண்டும் சூப்…! அருவருப்பூட்டும் செயல்..

tamil cinema : சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்று சாலையோரங்களில் சூப், சைனிஸ் உணவுக் கடைகள் ஏராளமாக உருவாகி வருகின்றது. மக்களும் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை இவ்வாறான சாலையோர கடைகளின் உணவிற்கு நாளுக்கு நாள் அடிமையாகி வருகின்றனர்.

சைனீஸ் உணவுகள் மட்டுமின்றி சூப் கடைகளிலும் மக்கள் அதிகமாக சென்று அருந்தி வருகின்றனர். சென்னையில் காரப்பாக்கம் பகுதியில் சூப் கடை நடத்திவரும் முதியவர் ஒருவர் வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்பு துண்டுகளை எடுத்து கழுவி மீண்டும் சூப்பிற்குள் போடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.