tamil cinema : நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளதுடன்,எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.
இவ்வாறான நிலையில்,நீண்ட நேரமாக எரிப்பொருளினை பெற்றுக்கொள்வதற்காக பல மணி நேரம் காத்திருந்த தாய் ஒருவர் கோட்டாபய அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி சவால் விடுத்துள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இதன்போது குறித்த தாய், என்னை சுட்டுக்கொன்றாலும் நான் உண்மையை பேசுவதற்கு பயப்படமாட்டேன்! ஒரு குடும்பமே சேர்ந்து முழு நாட்டையும் சீரழிக்கின்றது.
அப்பாவி மக்கள் தினமும் மாவிற்கும்,சீனியிற்கும்,எரிப்பொருளிற்கும் பல மணிநேரம் வீதியில் காத்துக்கிடக்கின்றனர்.சில பெண்கள் குழந்தைகளை சுமந்தவாறு வீதியில் நிற்கின்றனர்.இது ஒரு அரசாங்கமா? கோட்டாபயவை அரசாங்கத்தை விட்டு விலகிச்செல்லுமாறு கூறுங்கள்.
நாட்டை கேட்கும் நல்ல ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுமாறு கூறுங்கள்.எனது காலம் முடிந்துவிட்டு எனது பிள்ளைகள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றும் அரசாங்கத்திற்கு எதிராக சவால் விடுத்துள்ளார்.