31 March, 2023

கடல் கடந்து காதலனுக்காக போன‌ இலங்கை யுவதி… பின் காத்திருந்த சிக்கல்!

tamil cinema : சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சரவணனுக்கும், இலங்கையை சேர்ந்த நிஷாந்தினிக்கும் இடையே பேஸ்புக்கில் காதல் மலர்ந்தது திருமணத்தில் முடிந்துள்ளது.

அதற்கு பிறகு தான் சம்பவமே இருக்கின்றது.

இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக  காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தன் காதலனை கைப்பிடிக்க சுற்றுலா விசா எடுத்துக்கொண்டு இலங்கையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் நிசாந்தினி என்ற பெண் வந்து சேர்ந்தார் .

கோயில் ஒன்றில் இந்து முறைப்படி இந்த ஜோடி திருமணமும் செய்துள்ளனர்.

tamil cinema

tamil cinema

இந்த காதல் பறவைகளுக்கு உறவினர்களோ, குடும்பத்தினரோ எதிர்ப்பு காட்டவில்லை. மாறாக, இவர்களுக்கு புதுமையான வகையில் வினோத சிக்கல் வந்துள்ளது.

இந்த ஜோடி தங்கள் திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளது.

அப்போதுதான், இலங்கை பெண்ணை திருமணம் செய்வதை பதிவு செய்ய முடியாது எனத் தெரியவந்துள்ளது. முதலில் இந்த திருமணத்திற்கே தடையில்லா சான்று தேவை எனவும் அதிகாரிகள் கறார் கண்டிசன் போட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அதற்கு சேலம் மாவட்ட எஸ்.பி ஆபீஸில் விண்ணப்பித்துள்ளனர்.

இதனிடையே சுற்றுலா விசாவும் முடியும் காலத்தை நெருங்குகிறது. இதனால் இருநாட்டு விவகாரம் இந்த ஜோடி சேர்ந்து வாழ குறுக்கே நிற்கிறது.