tamil cinema : இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்திருந்தார்.
எனினும் அந்தத் தடையை மீறி கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 26953 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 72 கார்கள், 4 பஸ்கள், 2002 முச்சக்கர வண்டிகள், 1110 மோட்டார் சைக்கிள்களும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
இதே காலப்பகுதியில் 22779 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளது.