30 March, 2023

ஒவ்வொரு இலங்கையனும் துணிந்தவன் தான்.. சிங்கபூரில் வசிக்கும் இலங்கையரின் துணிகரமான செயல்..!

tamil cinema : சிங்கப்பூரின் புவாங்காக் வட்டரத்தில்  கூரிய வாளுடன் வீதியில் செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக நபர் செயற்பட்டார். இதன்போது சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையரான அமில சிந்தன, அந்த நபரை துணிச்சலுடன் செயற்பட்டு பிடித்துள்ளார்.

இது குறித்த காணொளிகள் அந்த பகுதியில் இருந்த கெமராவில் பதிவாகியுள்ளது. கூரிய ஆயுதம் வைத்திருந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் சந்தேகநகரை கைது செய்திருந்தனர்.

அமில சிந்தனவின் செயற்பாட்டிற்கு சிங்கப்பூர் காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.இதனிடையே, ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு வேண்டுமென்றே மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு சந்தேகநபருக்கு எதிரான நாளைய தினம் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share