tamil cinema : நாட்டில் எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக, உணவுப் பொதியின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்ட நிலையில் , சிற்றுணவகங்களில் வடை மற்றும் தேநீரின் விற்பனை அதிகரித்துள்ளதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சந்தையில், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளமையால், உணவுப் பொதியின் விலை மேலும் உயர்வடைந்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அதன்படி கோழி இறைச்சி உணவுப் பொதியின் விலை 300 ரூபாயாகவும், மீன் உணவுப் பொதியின் விலை 250 ரூபாயாகவும், முட்டை உணவுப் பொதியின் விலை 240 ரூபாயாகவும், மரக்கறி உணவுப் பொதியின் விலை 220 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில், வடையும், தேநீரும் சிற்றுணவகங்களின் பிரதான விற்பனைப் பொருட்களாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.