tamil cinema : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிய போவதாக அறிவித்த நாள் முதலே இணையத்தில் அன்றாடம் ஏதாவது ஒரு தகவல்கள் உலா வந்துகொண்டே இருக்கின்றன.
தனுஷ் கடந்த ஆண்டு ஹாலிவுட் படமான தி கிரே மேன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றார்.அப்போது தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் இருவரையும் உடன் அழைத்து சென்றார். அப்போது, தனுஷ் படப்பிடிப்பில் இருந்தப்போது அவருடைய செல்போன் ஐஸ்வர்யாவிடம் இருந்துள்ளது.
அந்த நேரத்தில், சில நடிகைகளிடம் இருந்து நடிகர் தனுஷுக்கு போன் கால்ஸ் வந்துள்ளது. ஐஸ்வர்யா காலை எடுத்து பேசியபோது அவர்கள் பதிலளிக்காமல் துண்டித்துவிட்டனர்.
மேலும், இதேபோல் அந்த நடிகைகளிடம் இருந்து சில மேஸேஜ்களும் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, தனுஷிடம் இன்னும் நீங்கள் இன்னும் திருந்தவில்லையா என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது இருந்தே கடுப்பான தனுஷ், இனிமேலும் ஒன்றாக இருப்பது சரியாக இருக்காது என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகும் இருவருக்குள்ளும் சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்ந்த வண்ணம் இருந்ததால் இருவரும் பிரிந்தே இருந்ததாக கூறப்படுகிறது.