tamil cinema : தமிழ் சினிமாவில் நம்ம வீட்டு பெண் போன்ற தோற்றத்துடன் குடும்ப பாங்கான கேரக்டரில் அதிகம் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தேவயானி.
தொட்டாசினிங்கி என்னும் திரைப்படத்தில் அறிமுகமான அவர் அந்த திரைப்படத்தில் ஓவர் கிளாமராக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து அஜித், பிரசாந்த் நடித்த கல்லூரி வாசல் திரைப்படத்திலும் அவர் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.
அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு சத்யராஜ், பிரபு நடிப்பில் வெளியான சிவசக்தி திரைப்படத்தில் ஐட்டம் டான்சராக ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பாடலில் தேவயானி மிகவும் குட்டையான உடையில் டான்ஸ் ஆடியிருப்பார்.
அதன்பிறகு கேமராமேனாக இருந்த தங்கர்பச்சான், தேவயானிக்கு காதல் கோட்டை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.
அதன் பின்னர் தேவயானி அந்த மாதிரி ரோலில் நடிக்காமல் தற்போது வரை குடும்ப பெண் தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார். சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும்போதே தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கி விட்டார்.