tamil cinema : தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கந்தளாய், கோவில்கிராமம் செஞ்சிலுவைச் சங்க கிராமத்தைச் சேர்ந்த லக்ஷிகா ராமநாதன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் குறித்து மாணவியின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மாதம் திகதி எனக்கும், எனது கணவருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மகள் சத்தம் போட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மகள் குடித்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
நான் போய் என்ன செய்தாய் என்று கேட்டேன். அப்போது அவரது வாயிலிருந்து நுரை வெளியேறியது எனது மகளை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.
அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் சிறுமியின் தாய் நாகராணி தெரிவித்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை களை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.