30 May, 2023

உக்கிரமான போர் மத்தியிலும் உக்ரைன் ராணுவர்களின் நெகிழ்ச்சி செயல்..!

tamil cinema : உக்ரைன் நாட்டில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் நாட்டின் எள்லையில் ரஷ்யா கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வந்தது. அப்போதே மேற்குலக நாடுகள், ரஷ்யா போர் தொடுக்க உள்ளதாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தன.

ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போர் 4ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போர் காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் போலாந்து எல்லையில் குவிந்துள்ளனர். இந்தப் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து ஆண்கள் வெளியேறக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ராணவ வீரர்கள் நாய் குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சி வெளியாகி நெகிழ வைத்துள்ளது. குறித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.