tamil cinema : ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் சஹாரா பாலைவனத்தில் இருந்து உருவான புழுதி ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள நிலையில் பிரித்தானியாவைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய மக்கள் ஆரஞ்சு நிற வானம் மற்றும் இரத்த நிறத்தில் மழை தொடர்பில் புகாரளித்துள்ளனர்.
பிரித்தானியா முழுவதும் புழுதி மூடிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், உடைகள், பூந்தோட்டங்கள் உள்ளிட்டவைகளில் தூசி காணப்பட்டதுடன், இரத்த நிறத்தில் மழையும் பெய்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
செலியா புயல் உலகம் முழுவதும் புரட்டி எடுத்துள்ள நிலையில் அட்லாண்டிக் பகுதி முழுவதும் புழுதி சுழன்றடிக்கிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாசா வெளியிட்ட புகைப்படங்களில் பூமியின் மேற்பரப்பின் பெரும் பகுதியில் மிகப்பெரிய புழுதி மேகங்களைக் காட்டுகின்றன.
இதுமட்டுமின்றி, ஐரோப்பா முழுவதும் சஹாரா மணல் புயல் வீசியதால், பிரித்தானியா முழுவதும் வானம் வினோதமான இரத்தக்களரி ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளதால் மக்கள் அச்சம் மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.