30 March, 2023

ரொம்ப பெரிய மனசு நம்ம சாருக்கு..மக்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்!

tamil cinema : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரபரப்பாக நடந்தது.  பெரிய பிரச்னைகள் ஏதுமின்றி சுமூகமாக நடைபெற்று வரும் வாக்கெடுப்பு, பிரபலங்கள் வரும் நேரம் மட்டும் சற்று பரபரப்பாக மாறிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் முக்கிய பிரபலங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே இருக்கும் வாக்குச்சாவடிகள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

தளபதி விஜய் அவர்கள் காலையிலேயே தனது வாக்கை பதிவிட அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியான நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் பதிவிட ரசிகர்கள் சூழ ஆரவாரத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்றார். சென்ற முறை வாக்களிக்க சைக்கிளில் இவர் வந்தது பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது ரெட் கலர் சான்றோ காரில் வாக்களிக்க வந்தார்.

மீடியா கேமரா மொத்தமும் அவரை நோக்கி இருக்க, கூட்டம் அதிகம் ஆனதால், இந்த பரபரப்பை தவிர்க்க லைனில் நீக்காமல் வோட் அளிக்க முன்னே சென்றார். இதனால், வரிசையில் நின்ற மக்களிடம் மன்னிப்பு கேட்டு உள்ளே சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share