tamil cinema : விஷால் நடிச்ச திமிரு படம் மூலமா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விநாயகன். இவர் ஷ்ரியா ரெட்டி கூட வரும் கால் கொஞ்சம் ஊனமான கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாரு.
என்னதான் இவர் தமிழ் சினிமால underplay பண்ணாலும், இவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்.
இவர் நடிச்ச ஒருத்தி அப்படிங்கிற பட ப்ரோமோஷன் கொச்சியில் நடந்தது. இதுல கலந்து கொண்ட செய்தியாளர் ஒருத்தர் #MeToo பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேள்வி எழுப்ப,
அதற்கு அவர் #Metoo என்றால் முதலில் என்ன? ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வெச்சுக்குறதான்னு கேட்ருக்காரு.. பின்னர் எனக்கு ஒரு பொண்ண புடிச்சிருந்தா நான் அவங்க கிட்ட போய் அவங்களுக்கும் புடிச்சிருந்தா நேரடியா உறவு கொள்ள விருப்பமா அப்டின்னு கேப்பேன். அந்த பொண்ணுக்கு புடிச்சிருந்தா மட்டும் தான் OK சொல்வாங்க.
இப்படி, நான் பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வெச்சுருக்கேன் அப்டினு அந்த செய்தியாளர் சந்திப்புல சொல்லிருக்காரு.
இவரோட பதில் பலரை முகம் சுளிக்க வெச்சுருக்கிது. மலையாள சினிமாவை சீந்த பல முன்னணி நடிகர்கள்/நடிகைகள் கடுமையா விமர்சனம் பண்ணி வர்றாங்க. அதுமட்டுமில்லாமல் கேரளா பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கிருக்காங்க.
நடிகை பார்வதி இவரோட புகைப்படத்தை தன்னோட சமூக வலைதள பக்கத்தில பதிவு செஞ்சு, “அந்த செய்தியாளர் சந்திப்பு ஒரு அவமானம்” அப்டின்னு பதிவு செஞ்சுருக்காங்க.