21 March, 2023

அந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலம்…திடீர் திருமணம் செய்த ஜோடிகள்!

tamil cinema : ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராணுவ சீருடையில் வந்த திருமண தம்பதியான லெசியா மற்றும் வலேரி கையில் பூக்கொத்தை வைத்துத்திருந்தனர்.

மணமகன் வலேரி லெசியாவிற்கு ஹெல்மெட் மாட்டிவிடும் போது மணமகள் லெசியா புன்னகைத்தபடி வலேரியின் கைகளைப் பிடித்துக் கொண்டுருந்தார்.

சக வீரர்களின் குழு கோரஸாக டூயட் பாடியது, அதில் ஒருவர் வீணை போல் ஒலிக்கும் உக்ரேனிய நாட்டுப்புற இசைக்கருவியான பாண்டுராவை வாசித்தார்.

இந்த வீடியோ இப்போது இணையதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.