tamil cinema : தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வரும் மனைவிக்கு முகப்பரு இருந்ததால் அவருடன் கணவன் சேர்ந்து வாழ மறுத்ததுடன், ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தமிழகத்தின் கோவையில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து. சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்க்கும் இவருக்கும், கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த பெண் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் முகத்தில் திடீரென்று முகப்பரு ஏற்பட்டு அது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பிச்சைமுத்து அவருடன் சேர்ந்து வாழ மறுத்ததோடு தனது மனைவியை செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்து உள்ளார்.
கடந்த 25ஆம் திகதி பிச்சைமுத்து தனது செல்போனில் உள்ள மனைவியின் ஆபாச படத்தை காட்டி அவரை துன்புறுத்தியதுடன், வெளியே சொல்லக் கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.
பிச்சைமுத்துவின் இந்த கொடூர செயலுக்கு குடும்பத்தாரும் உடந்தையாக இருந்து வந்துள்ளனர். அத்துடன் பிச்சை முத்து தனது மனைவியின் ஆபாச புகைப்படத்தை குடும்பத்தினர் சிலருக்கும் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமையை தாங்க முடியாத வங்கி அதிகாரியான அப் பெண் சம்பவம் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் பிச்சைமுத்துவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக கூறி குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.