29 May, 2023

தன்னோட உயிர காப்பாத்திக்க எவன் உயிர் போனா என்ன..? போராடிய பாம்பு!

tamil  cinema : ராட்சத பாம்பு ஒன்று சாலை இடுக்கில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய நிலையில், தான் விழுங்கிய முட்டைகளை வாந்தி எடுத்த காட்சி வைரலாகி வருகின்றது.

பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும். இங்கு பாம்பு ஒன்று சாலை இடையே காணப்பட்ட இடைவெளியில் சிக்கிக்கொண்டு உயிரைக் காப்பாற்ற போராடி வருகின்றது.

ஒரு கட்டத்தில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் விழுங்கிய முட்டைகளை வெளியே கொண்டு வந்தால் தான் முடியும் என்று அறிந்து முட்டைகள் அனைத்தையும் வாந்தி எடுத்துள்ளது.

இறுதியில் 4 முட்டைகள் அடுத்தடுத்து வெளியான பின்பு மிகவும் சாமர்த்தியமாக தப்பித்துள்ளது.