9 மாத குழந்தைக்கு இளம் தாய் செய்த கொடூர செயல்..!!தென்னிலங்கையில் பரபரப்பு..!

கொடூர செயற்பாடு காரணமாக தென்னிலங்கையில் இளம் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் தனது 9 மாதகுழந்தையை காணவில்லை என காலி, மஹாபாகே பிரதேசத்தில் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பொலிஸார் நடத்திய விசாரணையில், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணையின் போது, ​​குழந்தையை கிணற்றில் வீசி தாயே கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, கொலை தொடர்பில் குழந்தையின் தாயார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம – ஹலந்துருவ வீதியில் வசிக்கும் 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *