மைத்துனரால் சகோதரியின் வீட்டிற்கு சென்றவருக்கு நடந்த கொடூரம்..!!

கூரிய ஆயுதங்களால் களுத்துறை மாவட்டம் – மொரந்துடுவ, பொல்ஹேன பிரதேசத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.சம்பவத்தில் சந்தேக நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு மேலும் சிலருடன் சென்றிருந்த போதே இந்த தகராறு ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மொரந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *