காட்டுப்பகுதிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இ.போ.ச பேருந்து சாரதி..!! புத்தளத்தில் பரபரப்பு..!

நேற்றய தினம் (2024.05.19) புத்தளம் நிகவெரட்டிய – கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரண்டு பிள்ளைகளின் தந்தையான நிகவெரட்டிய, ஹூலுகல்ல பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு சடலாமக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி என விசாரணையில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் மனைவி தொழில் நிமித்தமாக வெளிநாட்டில் சென்றுள்ளமையும், பிள்ளைகள் இருவரும் வேறு இடத்தில் கல்வி கற்று வருவதும், நபர் தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிகவெரட்டிய பிரதேச மரண விசாரணை அதிகாரி ரஞ்சித் தர்மசிறி சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணனையை நடத்தினார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.நிகவெரட்டிய பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமின குமாரவின் பணிப்புரையின் பிரகாரம் , உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த குணவர்தனவின் மேற்பார்வையில், நிகவெரட்டிய தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சுபசிங்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *