மூன்று மாதங்களாக தேடப்பட்டு வந்த சிறுமி கண்டு பிடிப்பு..!!

கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் மூன்று மாதங்களுக்கு முன்னர் கம்பஹா – திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன சிறுமி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியுடன் இருந்த இன்னும் ஒருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.திவுலபிட்டிய கொங்கடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக, மூன்று மாதங்களுக்கு முன்னர் அவரது தாயார் படல்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாரால் காணாமல் போன சிறுமியை பலமுறை தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.அதன் பின்னர், சிறுமியைக் கண்டுபிடிக்கும் நோக்கில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பல குழுக்கள் களமிறக்கப்பட்டன.குறித்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியிருப்பதாக பொலிஸ் குழுவிற்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.அதற்கமைய, அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழுவினரால் சிறுமியும், சிறுமியுடன் இருந்த ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சிறுமி படல்கம பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *