வாளால் கையை வெட்டி வீழ்ந்த கை துண்டை எடுத்து சென்ற குழு..!! அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

நேற்றையதினம் (01-04-2024) இரவு யாழ். வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் கும்பல் ஒன்றினால் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருகையில் நேற்றய தினம் இரவு கூரிய வாள்களுடன் சென்ற கும்பல் ஒன்று பருத்தித்துறை வட்டுவன் பகுதியில் உள்ள நபரொருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர்.

இதேவேளை, வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் ஏடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட நபர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.சம்பவம் தொடர்பில் வடமராட்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *