வாக்கு மூலம் பதிவு செய்ய அழைத்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை கடித்த நபர்..!!

வாக்குமூலம் பெறுவதற்காக சந்தேக நபரை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை சந்தேக நபர் கடித்ததாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இசை கச்சேரியின் போது குடிபோதையில் செயல்பட்ட நபரை கைது செய்து வாக்குமூலம் பெற முயன்ற போதே இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் மொனராகலை – ஹுலந்தாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபரின் பிடியில் இருந்து பொலிஸ் அதிகாரியை விடுவிக்க பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.இதன் போது சந்தேக நபரின் கை கண்ணாடியில் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *