வீட்டில் கொள்ளையிட வந்தவர் வீட்டிலேயே மரணம்..!!தென்னிலங்கையில் நடந்த பரபரப்பு..!

வீடு ஒன்றிற்குள் கொள்ளையிட வந்த நபர் ஒருவர் வீட்டு வாசலிலேயே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று கொழும்பு – அவிசாவளை – உக்வத்தை பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த இச் சம்பவமானது நேற்று அதிகாலை நடந்துள்ளதாக‌ தெரிவிக்கப்படுகின்றது.

உக்வத்தை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றிற்குள் பிரவேசித்த சந்தேகநபர், வீட்டில் இருந்த கையடக்கத் தொலைபேசியை திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.இதன்போது வீட்டின் மதில் வழியாக வெளியேற முயற்சித்த நிலையில், சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து அவிசாவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து,

பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உயிரிழந்தவர் 45 வயதுடையவர் எனவும், அவரது அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம், அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *