காணமல் போன சிறுவன் பௌத்த பிக்குவாக துறவறம்..!!

கடந்த நான்கு நாட்களுக்கு முன் புத்தளம் மதுரங்குளியில் வைத்து காணமல் போன சிறுவன் ஒருவர் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.தாய் வெளிநாட்டில் இருந்த நிலையில் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த சிறுவன், குடும்பத்தின் அதிருப்தியால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் கொழும்புக்கு தனியாக வந்த சிறுவனை புத்த பிக்கு ஒருவர் சந்தித்துள்ளார்.குறித்த பிக்குவின் அழைப்பின் பேரில் கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றுக்குச் சென்ற சிறுவன் தற்போது பௌத்த பிக்குவாக துறவறத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *