பிரச‌வித்த குழந்தையை தாயே எரித்து கொலை..!! முல்லைத்தீவில் பேரதிர்ச்சி.!

பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கில் பாதிரியார் உளட்பட 3 பேர் கைது செய்யப்படுள்ளனர்.குறித்த சம்பவமானது முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இடம் பெற்றுள்ளது.கடந்த (15/03/2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்த தாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த பெண்ணுடன் மூவரை கைதுசெய்துள்ளனர்.

பெண்ணின் வீட்டில் குழந்தை பிரசவித்து பொலித்தீன் பையினால் சுற்றி கொண்டு சென்று புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியில் எரித்ததாக கூரப்படுகின்றது. மதபோதகர் ஒருவர் குழந்தையை எரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சம்பவ இடத்திற்கு நேற்றய தினம் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த சம்பவ இடத்தினை பார்வையிட்ட போது,

சில தடயப் பொருட்களை மீட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிபதியிடம் தெரிவித்தனர்.இதனையடுத்து தடய பொருட்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய பெண்ணும், பெண்ணின் தாயாரும், மதபோதகர் உட்பட மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பிறந்த குழந்தையை தாய் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *