யானைக் காவலிற்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு..!

வாகரை பொலிஸார் மட்டக்களப்பு, வாகரை, கதிரவெளி சலம்பைக்குளம் வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 47 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வாகரைப் பிரதேச செயலகத்தில் சமூர்த்தி முகாமையாளராகக் கடமையாற்றிய நபரே இவ்வாறு மீட்கப்பட்ட சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர், வழமையாக வயல் காவலுக்குச் செல்பவர் என்றும் கடந்த புதனன்றும் வயல் காவலுக்குச் சென்றதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.வழமையாக காலை வீட்டிற்க்கு இரவுக் காவல் முடிந்து வீட்டுக்கு வருபவர் அன்றைய தினம் வராததால் தந்தையை தேடி மகன் வயலுக்கு சென்றுள்ளார்.அப்போது தந்தை பயணம் செய்த மோட்டார் சைக்கிள் அங்கு நிறுத்தப்பட்டிருக்க, பரணடியில் தந்தை இறந்து கிடந்துள்ளார்.

சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதும் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பணிப்புரையின் பேரில் மரண விசாரணை அதிகாரி ரமேஸ் ஆனந்தன் பிரேத பரிசோதனை நடத்தினார்.இதனடிப்படையில், பிரேத பரிசோதனையில் அவர் பரணில் இருந்து இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *