நாளை 30ஆம் திகதி நள்ளிரவு முதல் மே 15 வரை அமுலில் இருக்கும் தடை உத்தரவு ..!! மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..!!

நாளை(30) நள்ளிரவுடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.ஏப்ரல் 30ஆம் திகதி முதல் 2023ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடியும் வரை அனைத்துப் பரீட்சை தயாரிப்புப் பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் தடை நாளை 30ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் மே 15 வரை அமுலில் இருக்கும். , மேலும் இந்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *