தாய் முன்னே மகனுக்கு நடந்த சோகம்..!!யாழில் பரபரப்பு சம்பவம்..!

5 பேர் அடங்கிய குழு ஒன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனின் வீட்டிற்குள் புகுந்து அவரது தாயார் முன்னிலையில் அவரை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.இச் சம்பவமானது நேற்று முன் தினம் (01-05-2024) காலை 5 மணியளவில் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.இருப்பினும், பொலிஸார் அந்த இடத்திற்கு வருவதற்குள் மாணவனைத் தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்த போது தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பொலிஸ் முறைப்பாடு அளிக்க மறுத்துவிட்டதாகத் தெரியவருகின்றது.தன்னை தனது நண்பர்கள் தவறுதலாக தாக்கியதாக கூறி பொலிஸாரை மாணவன் அனுப்பிவிட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *