கணவனை கம்பத்தில் கட்டிவைத்த மனைவி..!! கணவன் மரணம்..!

மனைவியால் கணவன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.குறித்த சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் தனது பிள்ளைகளின் அறிவுறுத்தலின் பேரில் வீடியோ அழைப்பின் ஊடாக தாய் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய வெலிகம தெனிபிட்டிய கொஸ்கஹஹேன பிரதேசத்தை சேர்ந்த பிரேமகுமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு அருகில் உள்ள கம்பத்தில் மனைவியால் கணவன் கட்டி வைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.இறந்தவர் குடித்துவிட்டு வந்து மனைவியை பலமுறை துன்புறுத்தியுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.வீட்டின் முன் நாற்காலியில் அமரவைத்து விட்டு கணவனை கம்பத்தில் கட்டிவைத்தனர். இதற்கிடையில் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் வீடியோ அழைப்பு மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்தனர்.தொந்தரவு செய்யும் தந்தையைத் தாக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர்.

அதற்கமைய, மனைவி மற்றும் ஏனையோரால் கணவர் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் வெலிகம வாலான அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.கழுத்தில் கயிறு கட்டப்பட்டதால் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், உயிரிழந்தவரின் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *