கணவரின் அட்டகாசம் தாங்காமல் பொலிஸாரிடம் கணவரை பிடித்து கொடுத்த மனைவி..!!

அட்டகாசம் தாங்காமல் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வைத்து மருதங்கேணி பொலிசார் குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளனர்.மேற்படி குடும்பஸ்தர் அண்மையில் பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டதால், அவரது மனைவி மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பலமுறை முறைப்பாடு செய்தும் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து, நேற்று முந்தினம் (14-02-2024) நபரொருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயத்திற்குட்படுத்திய நிலையில் நிலையில் குறித்த குடும்பஸ்தரை மருதங்கேணி பொலிஸார் தேடிவந்துள்ளனர்.

நேற்றய தினமும் அவர் தனது வீட்டில் மனைவியைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவரது மனைவி பாதுகாப்புக்காக வேறு இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.தான் உயிர்மாய்ப்பு செய்யப் போவதாக குடும்பஸ்தர் தனது வீட்டின் சுவரெங்கும் எழுதிவைத்துள்ளதுடன் மனைவி, பிள்ளைகளை கொடூரமாக தாக்கி அச்சுறுத்திவந்ததால் மனைவியின் முறைப்பாட்டிற்கு அமைய நேற்று மருதங்கேணி பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் தனது கணவர் மீது பல்வேறு முறைப்பாடுகள் இருப்பதால் தனக்கும் தனது குழந்தைக்கும் உயிர் பாதுகாப்பு தேவை என மருதங்கேணி பொலிஸாரிடம் குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், தனது கணவனை நீதிமன்றில் உற்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு முற்படுத்தி மனநல காப்பகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *