பழங்கால ரயில் முன் செல்பி எடுக்க சென்ற பெண் பரிதாபம மரணம்..!! இணையத்தை உலுக்கிய வீடியோ காட்சி..!

பழமை வாய்ந்த ரயிலின் முன் செல்பி எடுக்கச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று மெக்சிகோவில் இடம் பெற்றுள்ளது.1930 ஆண்டு நீராவி இன்ஜீன் கொண்டு உருவாக்கப்பட்ட பேரரசி’ என்று அழைக்கப்படக்கூடிய பழங்கால ரயில் கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பாட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடையகிறது. குறித்த ரயில் நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. பின்னர், ஜூலை மாதம் கனடா திரும்பி, அத்துடன் அங்கு ஓய்வு பெறுகிறது.

இந்நிலையில், பேரரசி தொடருந்து மெக்சிகோவில் நுழையும்போது ஹிடால்கோ பகுதி அருகே பலரும் புகைப்படம் எடுப்பதற்காக கூடியுள்ளனர்.இதன்போது, தனது மகனுடன் வருகை தந்த இளம்பெண் ஒருவர் பேரரசி தொடருந்து முன்பு செல்பி புகைப்படம் எடுக்க முயன்றபோது தொடருந்தின் எஞ்சின் இளம்பெண்ணின் தலையில் மோதியுள்ளது.இதனை தொடர்ந்து, பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *