தன் உயிரை பணயம் வைத்து சிறுமியின் உயிரை காப்பாற்றிய இளைஞன்..!

இளைஞன் ஒருவர் இரத்தினத்தினபுரி, கலவான குகுலே ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற சிறுமியை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொலிஸார் விசாரணைகளில் குறித்த சிறுமி கலவான துனுமகல வத்த பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிய வந்துள்ளது.

அப்பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த சிறுமி ஆற்றில் குதித்ததை இளைஞன் அவதானித்த நிலையில் அவரும் ஆற்றில் குறித்து சிறுமியை காப்பாற்றியுள்ளார்.இந்த சிறுமி கலவான துனுமகலவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் வீட்டில் ஏற்பட்ட கோபம் காரணமாக குகுலே ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயற்சித்ததாகவும் கலவான பொலிஸார் தெரிவித்தனர்.உயிரை பணயம் வைத்து ஆற்றில் குதித்து சிறுமியை அந்த இளைஞர் காப்பாற்றியுள்ளார். விசாரணைகளுக்காக சிறுமி கலவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *