விடுதியில் தனது காதலியுடன் தங்கச் சென்ற இளைஞன்..!! இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்..!

கடையில் 10,000 ரூபாய் பணத்தை திருடி தனது காதலியுடன் விடுதியில் தங்க முற்பட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது அம்பாறை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.குறித்த இளைஞர் பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த போதே இந்த செயலை செய்து கைதாகியுள்ளார்.அம்பாறை பொலிஸ் போக்குவரத்து அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பஸ் நிலையத்தில் தனது காதலியை நிற்க சொல்லிவிட்டு அப்பகுதியில் உள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் நுழைந்து குறித்த‌ இளைஞன் பணத்தைத் திருடியதாக‌ தெரியவந்துள்ளது.இதனையடுத்து யுவதியின் பெற்றோரை வரவழைத்த பொலிஸார் யுவதியை ஒப்படைத்ததுடன் இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *