உயிரிழந்த இளைஞன்..!!கொலையா..? தற்கொலையா..?..இளைஞனின் கைத்தொலைபேசியில் இருந்து சிக்கிய உண்மை..!

கடந்த புதன் கிழமை காலி மாவட்டத்தில் தெல்வத்த – மீட்டியாகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இறந்த இளைஞன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து எடுத்த செல்ஃபியின் அடிப்படையில், இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர். உயிரிழந்த இளைஞன் ஹிக்கடுவை தெல்வத்த மெட்டிவல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

மகன் காலையில் எழுந்திருக்காத நிலையில் அறையின் கதவைத் திறந்தபோது, இவரது சடலம் தரையில் கிடப்பதைக் கண்டதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இறந்த இளைஞன் அருகே இருந்த துப்பாக்கியை கருவா தோட்டத்தில் வீசியதாக தாயும் பாட்டியும் பொலிஸாரிடம் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்து பொலிஸார் இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ள பயன்படுத்திய துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும், இளைஞன் போதைக்கு அடிமையானவர் என்பதும், காதலியால் காதல் உறவு துண்டிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞனின் கைத்தொலைபேசியை பொலிஸார் ஆய்வு செய்ததில் இவர் தன்னைத்தானே சுட்டுக் உயிரை மாய்த்து கொள்வதற்கு முன் அவர் எடுத்த செல்பியைக் கண்டுப்பிடித்தனர்.காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிரின் பணிப்புரையின் பேரில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *