தகராறை விலக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு..!!

யாழ்ப்பாணத்தில் தனது சகோதரியின் கணவருக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையைத் தவிர்க்க விரும்பிய இளைஞர் ஒருவர் தனது சகோதரியின் கணவரின் கத்திக்குத்துத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.23 வயதுடைய யாழ்ப்பாணம் கொக்குவில், தாவடி பகுதியை சேர்ந்த நியூட்சன் என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (23) உயிரிழந்ததாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.உயிரிழந்த இளைஞனின் அக்காவின் கணவருக்கும்- இளைஞனின் தந்தைக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் மீது, அக்காவின் கணவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இளைஞனின் தந்தை மீதும் தலைக்கவசத்தால் தாக்கிய நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கத்திக்குத்துத் தாக்குதலின் பின்னர், சகோதரியின் கணவரை சுன்னாகம் பொலிசார் கைது செய்ததுடன்,விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *