டார்ச்சர் பண்ணுவாங்க..தப்பா தொடுவாங்க..!! நான் இந்த படத்தில் நடிக்க இதுதான் காரணம்..அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..!

முன்னதாக மலையாள படங்களில் நடித்த அனிகா, கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே தன்னுடைய மழலைத்தனம் மாறாத நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அனிகா.இப்படத்தை அடுத்து இவர் நடித்த மிருதன், நானும் ரவுடி தான், மாமனிதன், விஸ்வாசம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது 19 வயதான அனிகா, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.முதல் படத்திலேயே தன்னுடைய மழலைத்தனம் மாறாத நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அனிகா. தற்போது ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள PT சார் என்ற படத்தில் நடித்துள்ளார்.அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது PT சார் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அனிதா அந்த படத்தில் தான் நடிக்க முக்கியமான காரணமாக கூறி இருக்கும் விஷயமானது இந்த படத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தான் விரிவாக சொல்லியிருக்கிறார்களாம்.குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களை தவறாக தொடுவது, டார்ச்சர் செய்வது இது போன்ற விஷயங்கள் தினம், தினம் சமூகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதனை இன்று வரை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலையில் இது போன்ற விவகாரமான முகம் சுளிக்க வைக்க கூடிய அனுபவங்கள் தனக்கு ஏதும் நடந்ததில்லை. இதற்கு காரணம் என் அம்மா எப்போதும் என் கூட தான் இருப்பாங்க என்று சொல்லி இருக்கிறார்.இது தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *