இன்று அதிகாலை நடந்த சோகம்..!! காதலி வீட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு..காரணம் என்ன..?

இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து யாழில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 22 வயதுடைய சிறீவரதன் சஞ்சிதன் என்ற இளைஞனே இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த இளைஞன் அவரது காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும் அதனையடுத்து 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மரணம் குறித்து இளைஞரின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதை அடத்து சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகள் நாளையதினமே நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *