யாழில் சோகம்..!! தவறான முடிவால் முதியவர் உயிரிழப்பு..வெளியான சிசிரீவி காட்சி..!

தவறான முடிவெடுத்து முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ளார்.குறித்த சம்பவமானது யாழ்ப்பாண பகுதியில் இடம் பெற்றுள்ளது.76 வயதுடைய ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை தியாகராஜா என்ற முதியவரே நேற்று(16.05.2024) இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,முதியவரின் மனைவி உயிரிழந்த நிலையில் அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் மன விரக்தியடைந்த அவர் நேற்று அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் உயிரிழக்கும் காட்சி அங்கிருந்த சிசிரீவி கருவியில் பதிவாகியுள்ளது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதோடு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *