வெசாக் பண்டிகையை முன்னிட்டு நடந்த சோகம்..!! சாகச கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் படுகாயம்..!

சாகச கிணறு இடிந்து வீழ்ந்ததில் ஐவர் படு காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் கண்டி – திபுலபலஸ்ஸ, ரொட்டலவெல விளையாட்டரங்கில் இடம் பெற்றுள்ளது.திவுலபலஸ்ஸ, ரொட்டவெல பிரதேசத்தில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த சாகச‌ கிணறே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40, மற்றும் 45 வயதுடைய நான்கு ஆண்களும் கிராதுருகோட் மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திவுலபலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.காயமடைந்தவர்களில் இருவர் கிராதுருகொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *