கிணற்றிலிருந்து சடலமாக மீற்கப்பட்ட இரண்டரை மாத குழந்தை..!! நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் பொலிஸார்..!

இரண்டரை மாத குழந்தையின் சடலம் ஒன்று புத்தளத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்த‌ கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது புத்தளம் – கற்பிட்டி, கந்தகுடாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இன்று அதிகாலை (02-04-2024) குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கிணற்றிலிருந்து மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *