30 May, 2023

வவுனியாவிலிருந்து பாதுகாப்பற்ற பயணம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை (PHOTOS)

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி சென்ற அரச பேருந்தில் போதிய இடவசதி இன்மையால் இரவு வேளையில் பாதுகாப்பற்ற விதத்தில் பலர் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, பேருந்தில் அதிக சனநெரிசல் காரணமாக சிலர் பொதிகள் வைக்கப்படும் பகுதியில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

எனவே குறித்த பகுதிக்கு மாலை நேரத்தில் போதியளவு பேருந்து சேவையினை ஏற்படுத்தி தருமாறு பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.