நடிகர் விஜய் Vijay
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர். அதனாலும் கூட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
இன்ஸ்டாகிராம் தொடங்கியதயற்கு இதுதான் காரணமா?
அண்மையில் கூட விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது விஜய் குடும்பம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.
என்னதான் திரையில் பல ரசிகர்களைக் கொண்டு கொண்டாடி வந்தாலும் வீட்டில் எல்லோருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறு தான் நடிகர் விஜய்யிக்கும் அவரது தந்தைக்கும் பல பிரச்சினைகள் இருந்தது என சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரவி வந்தது.
அது மட்டுமல்லாமல் சங்கீதாவுடன் விவாவகரத்து செய்யப் போவதாகவும், கீர்த்தி சுரேஸ் உடனும் பல கிசு கிசுக்கள் பரவி வந்தது.
இன்ஸ்டாகிராமில் விஜய்
விஜய் அண்மையில் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை ஆரம்பித்திருந்தார். ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே 7 மில்லியன் ஃபாலோவார்களை தொட்டு விட்டது.
ஆனால் அவர் ஏன் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கம் வரவேண்டும் என யாரும் யோசிக்கவில்லை. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தற்போது அரசியலில் களம் இறங்கப் போவதாகவும் இது தொடர்பில் ரசிகர் கூட்டம் மூலம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் விஜய் தன்னுடைய படங்களை புரோமோட் செய்வதற்காக ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மற்றொரு பக்கம் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாக இருந்தாலும் இந்த இன்ஸ்டாகிராம் கணக்கு அதற்காக தொடங்கப்பட வில்லை எனவும் பேசப்பட்டு வருகிறது.
என்னவாக இருந்தாலும் லியோ திரைப்படத்தை அனைத்து அப்டேட்களும் இன்ஸ்டாகிராமில் விஜய் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.