விசா இன்றி இலங்கைக்குள் நுழைய ஏழு நாடுகளுக்கு அனுமதி நீடிப்பு..!!

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கும் முன்னோடித் திட்டம் ஏப்ரல் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்த முன்னோடித் திட்டம் குறித்து அடுத்த சில வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2024 மார்ச் 31 வரை விசா கட்டணம் இல்லாமல் நுழைவதற்கான முன்னோடி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *