சித்திரை புத்தாண்டு பாடலை கேலி செய்து பாடியவருக்கு நேர்ந்த நிலமை..!!

மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் சூர்ய மங்கள்ய என்ற‌ புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல் செய்யும் வகையில் பாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.“சூர்ய மங்கல்ய” என்ற பிரபல பாடகர் ரோஹன பெத்தகேவின் பாடலே இவ்வாறு திரிபுபடுத்தி பாடப்பட்டுள்ளது.திரிபுபடுத்தப்பட்ட பாடல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடாபில் வடமேல் மாகாண கணனி குற்றப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.31 வயதான வாரியபொல தலாதுஓய பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நபர் மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் இன்று குளியாப்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *