29 May, 2023

திருமணமாகி 08 ஆண்டுகளாக உறவு இல்லை, உண்மையை அறிந்து அதிர்ச்சியான மனைவி

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தனது கணவர் ஒரு பெண் என்பதை அறிந்ததாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில், வசிக்கும் ஷீதல் என்ற 40 வயது பெண் தன் கணவர் விராஜ் வர்தன் என்பவர் இயற்கைக்கு மாறாக 8 வருடம் கழித்து உறவில் ஈடுபட்டு தன்னை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கணவரின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் புகார் கொடுத்துள்ளார். புகாரை அடுத்து அவரின் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உறவு இல்லை

மேட்ரிமோனியின் மூலம் 8 ஆண்டுக்கு முன் அறிமுகமாகியுள்ளனர். இது ஷீடலுக்கு இரண்டாவது திருமணம் என்றும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரின் முதல் கணவர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும், அப்போது அவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர், ஷீடல் – விராஜ் வர்தன் ஆகியோருக்கு திருமணம் ஆகியுள்ளது.

அவர்கள் ஹனிமூனுக்கு காஷ்மீர்ல சென்றுள்ளனர். ஆனாலும், அவர் முறையான உறவை வைத்துகொள்ளாமல் சாக்கு போக்கு காலத்தை கடந்து வந்துள்ளார்.

அவருக்கு ஷீடல் மிகவும் அழுத்தம் கொடுத்ததை அடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் ரஷ்யாவில் இருந்தபோது, ஒரு விபத்தால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தன்னால் உறவில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் சிறு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் முழுமையாக குணமடைந்து விடுவேன் என ஷீடலுக்கு விராஜ் நம்பிக்கை அளித்துள்ளார்.

8 ஆண்டுக்கு பின் கணவரை பெண் என அறிந்த மனைவி! அதன்பின் நடந்த பரபரப்பு சம்பவம்; | Husband As Woman After8 Years Of Marriage

அறுவை சிகிச்சை

அதன்பின்னர், கடந்த 2020 ஜனவரி மாதம், உடல் பருமன் காரணமான தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என விராஜ் ஷீடலிடம் தெரிவித்த விராஜ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், நீண்ட நாள்கள் கழித்து அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது தான், அவர் உடல் பருமனுக்காக அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றும், அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் மனைவிக்கு தெரியவந்தது.

மேலும், உண்மையை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மனைவியை மிரட்டியுள்ளார். இதன்பின் புகாரின் பேரில் காவல்துறையின் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Share