மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கோங்கோவில் வசிக்கும் பெண் இரண்டு ஆண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
பொதுவாக ஆப்பிரிக்காவில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை மணந்து ஒரே வீட்டில் வாழும் பழக்கம் நடைமுறையில் கிடையாது என்ற நிலையில் பிரான்சீன் ஜிசிலி என்ற பெண் முதல் கணவர் ரெமி முருலா மற்றும் இரண்டாவது கணவர் ஆல்பர்ட் ஜார்லேஸ் என்பவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
ஜிசிலி கூறுகையில், எனக்கும் ரெமிக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் இரண்டு குழந்தை உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரெமி என்னை பிரிந்து எங்கேயோ சென்றுவிட்டார்.
தனிமையிலேயே வாழ்ந்து வந்த எனக்கு ஆல்பர்ட் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து ஓராண்டுக்கு முன்னர் எங்களுக்கு திருமணம் நடந்த நிலையில் ஒரு குழந்தை பிறந்தது என கூறினார்.
இந்த சூழலில் தான் ரெமி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார், அப்போது ஏன் இரண்டாவது திருமணம் செய்தாய் என மனைவி ஜிசிலியிடம் சண்டை போட்டிருக்கிறார்.
பின்னர் இரண்டு கணவர்களுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ அவர் முடிவெடுத்த நிலையில் தற்போது அதன்படியே வாழ்ந்து வருகின்றனர்.