வட யார்க்ஷையரைச் சேர்ந்த Kirsty Bortoft, தனது துணைவரான Stuவுடன் நேரம் செலவிட விரும்ப, அவர் வரும் வரை தான் அவரது மூன்று பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வதாகக் கூறியுள்ளார் Kirstyயின் தந்தை.
Stu, Kirstyயை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்தால்,அவர் கண்கள் இரண்டும் திறந்த நிலையில், சுயநினைவிழந்து கிடந்திருக்கிறார்.
பதறிப்போன Stu முதலுதவி செய்துகொண்டே மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டதால் Kirstyயை கோமா நிலையில் வைத்திருந்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.
அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்ததாக தெரிவிக்கிறார் Kirsty.
தான் 40 நிமிடங்கள் உயிரற்ற நிலையில் இருந்ததாகக் கூறும் Kirsty, அந்த நேரத்தில் தனது தோழியான ஆவிகளுடன் பேசும் ஒரு பெண், தன்னை தனது வீட்டில் சந்தித்ததாகக் கூறுகிறார்.
அதாவது, ஆவியாக தனது வீட்டுக்குச் சென்ற Kirsty, தனது பிள்ளைகளுக்கும், தனது தந்தைக்கும் என்னென்ன தேவை என ஒரு பட்டியல் தயாரிக்கும்படி தனது தோழியிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கிறார்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் Kirstyயைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்க, இங்கே தனது வீட்டில் தனது தோழியை சந்திக்க ஆவியாக வந்திருந்த Kirstyயோ, தனது உடல் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும், தன்னால் இனி திரும்ப தன் உடலுக்குள் போகமுடியாது என்று எண்ணுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், Kirstyயின் தோழியோ, நீ கண்டிப்பாக திரும்பிப்போய்த்தான் ஆகவேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டாராம்.
இதற்கிடையில், மருத்துவமனையில், Kirstyக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், மனதை தேற்றிக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.
மருத்துவர்கள் Kirstyயை கோமாவிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சிக்க, வழக்கத்துக்கு மாறாக சட்டென கண் விழித்த Kirsty, உடனடியாக Stu எங்கே என்று கேட்டாராம்.
Kirstyயைத் தவிர உலகத்தில் யாரும் இதுவரை இப்படி எந்த பிரச்சினையும் இல்லாமல் கோமாவிலிருந்து விடுபட்டதில்லையாம்.
தற்போது தனது அனுபவங்களை anxiety பிரச்சினைகளால் அவதியுறுவோருடன் பகிர்ந்துகொண்டு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார் Kirsty.